நாளைய போராட்டத்துக்கு கிளிநொச்சி ஒன்றிணைந்த தொழிற்சங்கம் ஆதரவு! SamugamMedia

நாடளாவிய ரீதியில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு கிளிநொச்சி  ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.  

 கிளிநொச்சி மாவட்ட ஆசிரியர் ஆலோசகர் சங்கம்,  கிளிநொச்சி மாவட்ட அதிபர் சங்கம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் ஆகியன இணைந்து நேற்று தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போது, கிளிநொச்சி மாவட்ட ஆசிரியர் ஆலோசகர் சங்க செயலாளர் ரி.நிகேதன், நாளை 15 ஆம் திகதி தேசிய ரீதியிலே முன்னெடுக்கப்படுகின்ற அடையாள பகிஸ்கரிப்பினை கிளிநொச்சி மாவட்டத்தினுடைய ஆசிரிய ஆலோசகர் சங்கமும் தேசிய ஆசிரிய ஆலோசகர் சங்தே்தோடு இணைந்து மேற்கொள்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில் கற்றல் உபகரணங்களை மாணவர்கள் வாங்குவதிலும், ஆசிரியர்கள் போக்குவரத்து உள்ளிட்ட சிரமங்களை எதிர்கொள்வதாகவும் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

Leave a Reply