சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!SamugamMedia

சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தேசிய காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லா  தலைமையில் இன்று செவ்வாய் (2023.03.14) நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக்  ஒழுங்கமைப்பில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்  நடைபெற்ற  இக்கூட்டத்தில், சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பிரதிநிதிகள், கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது சுயேட்சை குழு உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் சட்டத்தரணி பஷீர் ஜுனைத், முக்கிய பிரமுகர்கள், கல்முனை மாநகர ஆணையாளர் முஹம்மத் அஸ்மி, திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
தேசிய காங்கிரஸ் தலைவர்,  பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவராக உத்தயோகபூர்வமாக கடமைப் பொறுப்பேற்று இடம்பெறும் முதலாவது கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சாய்ந்தமருதூரின் உள்ளக அபிவிருத்தி தொடர்பாக பல்வேறு விடயங்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு கலந்தாலோசனை செய்யப்பட்டதுடன் அதற்கான முன் மொழிவுகளும் வழங்கப்பட்டது.

Leave a Reply