தொழிற்சங்க கூட்டமைப்பின் கலந்துரையாடல் தோல்வி! SamugamMedia

அரசாங்கத்திற்கும் தொழிற்சங்க கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று இரவு இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின் போது தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு கைவிடுவதற்கான உறுதியான தீர்வுகள் எதனையும் அரசாங்கத்தால் முன்வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய கூட்டத்தின் பகுப்பாய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் இன்று தீர்வொன்று வழங்கப்படும் என கலந்துரையாடலில் இணைந்து கொண்ட அரசாங்க தரப்பின் அதிகாரிகள் தொழில்வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்புக்கு உறுதியளித்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட 4 மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய 5 மாகாணங்களில் இன்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினத்துக்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளைய தினம் சகல மாகாணங்களிலும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், பேச்சுவார்த்தை வெற்றியளிக்காத காரணத்தால் நாளைய போராட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply