சட்டக்கல்லூரி மாணவர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு! நீதி அமைச்சர் SamugamMedia

இலங்கை சட்டக்கல்லூரி மாணவர்கள் தமது சொந்த மொழியில் (சிங்கள/தமிழ்) பரீட்சைக்கு தோற்றுவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையை தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

இலங்கை சட்டக் கல்லூரியின் அபிவிருத்திக்காக தாம் உழைத்து வருவதாகவும், குறிப்பாக சட்டக் கல்லூரி மாணவர்களின் சொந்த மொழியில் (சிங்கள/தமிழ்) பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply