சம்பளங்களை அதிகரிக்காது, கொடுப்பனவுகளை வழங்காது இழுத்தடித்து ஏமாற்றும் அரசு! – ஆசிரியர்கள் குற்றச்சாட்டு samugamMedia

ஆசிரியர்களிற்கான சம்பளங்களை அதிகரிக்காது, கொடுப்பனவுகளை வழங்காது அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றி வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின்  உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்துக்கு எதிராக தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் ஆசிரியர் சங்கத்தினர் இன்றைய தினம் யாழ் பேருந்து நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

samugamMedia

இதையடுத்து சமூகம் ஊடகத்திற்கு கருத்து வெளியிடும் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், 

ஆசிரியர்களிற்கு வழங்கப்பட்ட கடன் தொகையானது 40 வீதத்திற்கானதே வழங்கப்பட்டது.  அதனுடைய வட்டி முன்னர் 9 வீதமாக இருந்ததுடன் தற்பொழுது அது 15 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

எமக்கான சம்பளத்தை அதிகரிக்காது வட்டியானது  40 வீதத்திலிருந்து மேலதிகமாக அறவிடப்படுகின்றது. இதனால் மிகவும் பாரிய பொருளாதார சுமையினை சுமக்க வேண்டியுள்ளது எனவும் கவலை வெளியிட்டுள்ளார். 

அதுமட்டுமன்றி, ஒரு ஆசிரியர் பணி நிமித்தம் வவுனியா, மாங்குளம் போன்ற வேறு இடங்களிற்கு  

சொல்வதாயின் ஒரு நாளைக்கு 1000 ரூபாய் வரையில் செலவாகின்றது. 

இவ்வாறான பொருளாதார நெருக்கடி சூழலில் எவ்வாறு நாம் எமது குடும்பத்தினை நடத்துவது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

samugamMedia

இவ்வாறான நிலையிலும் அரசாங்கம் எமக்கான கொடுப்பனவுகளை வழங்காது இழுத்தடித்து எம்மை ஏமாற்றுகின்றது எனவும் தெரிவித்தார். 

அப்பியாச  கொப்பிகளை வாங்க முடியாத சூழலில் சாதாரண தொழில் புரியும் பெற்றோர்களும், உத்தியோகத்தகர்களான  பெற்றோர்களும் தள்ளப்பட்டுள்ளனர். 

இவ்வாறான போராட்டங்களில் ஆசிரியர்களாகிய நாம்  மாணவர்கள் பாதிக்கப்படுகின்றமை கவலைக்குரியதே எனவும் தெரிவித்தார்.

Leave a Reply