இலங்கையில் இடி அமீன் ஆட்சி: ரவி குமுதேஸ் ஆதங்கம்!SamugamMedia

நாட்டில் இடி அமீன் ஆட்சி நிலவுவது போன்ற உணர்வு தோன்றுவதாக சுகாதார ஊழியர்கள் சம்ளேனத்தின் ஒருங்கமைப்பாளர் ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கையை விடுக்கும் முகமாக அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டதாக ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார்.  

நாட்டில் பணிபுரியும் வர்த்தகத்தினரை அடக்க முயற்சிக்கும் தரப்பினருக்கு  எதிர்ப்பையும், எச்சரிக்கையையும் விடுக்கும் முகமாக மாத்திரமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதே அன்றி பொதுமக்களை இன்னலுக்கு உட்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு இந்த நாட்டில் உள்ள மக்கள் முழுமையாக ஆதரவு வழங்குவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் எனவும் அரசாங்கத்தில் உள்ளவர்கள் தங்களின் பேச்சில் அதனை உறுதிப்படுத்த முனைகிறார்கள் என்றும் ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார்.   

ஆனால் பொதுமக்கள் உண்மை நிலைமையை தற்போது உணர்ந்து விட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply