வரவிற்கு ஏற்ற செலவினை செய்யவேண்டும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஸ்திரமான இறுக்கமான கொள்கை காரணமாக இலங்கையின் பொருளாதாரம் மேலும் வலுவடையும் என வாழ்நாள் பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்திருந்ததுடன் தற்போது மிண்டும் சரிவை நோக்கி செல்கின்ற நிலையில் இந்த விடயம் தொடர்பாக சமூகத்தின் செய்திப்பிரிவு வாழ்நாள் பேராசிரியரிடம் கேள்வி எழுப்பியிருந்தது.
இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இலங்கையில் இருந்தும் மக்கள் வெளியேறுவதாகவும் வெளிநாட்டில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதாலும் பாரிய அந்நியச்செலாவாணி தற்போது இலங்கைக்கு கிடைக்கபெறுவதாகவும் பாலசுந்தரம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடன் வழங்கிய வெளிநாடுகள் புதிய தவணையை வழங்கியதுடன் புதிய மறுசீரமைப்பிற்கும் உடன்பட்டுள்ளதாக பாலசுந்தரம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
எனவே இலங்கையின் பொருளாதார சூழ்நிலை தற்போது சிறிதளவு பலப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு நாட்டின் அரசியலையோ அல்லது தேர்தல் போக்கினையே தீர்மானிக்க முடியாது என்றும் பாலசுந்தரம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
இந்த தேர்தலை நடத்துவதால் அரசாங்கம் நஸ்டமடையப்போவதில்லை என்றும் இதற்காக பெருமளவான நிதி விரையமாகப்போவதில்லை என்றும் பாலசுந்தரம்பிள்ளை மேலும் தெரிவித்துள்ளார்.