மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கனத்த மழை! SamugamMedia

இன்று மதியம் 3 மணி தொடக்கம் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கனத்த மழை பெய்து வரும் நிலையில் சாமிமலை பெயர்லோன் தோட்ட வனப் பகுதியில் பெய்யும் கன மழை காரணமாக சாமிமலை ஆத்தாடி பிள்ளையார் கோயில் வெள்ளத்தில் மூழ்கியது.

இதனால் அந்த ஆலயத்தில் இருந்த பூஜை பொருட்கள் வெள்ளத்தில் மூழ்கியது.
தொடர்ந்து பலத்த மழை காரணமாக சாமிமலை பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஒரு லயின் குடியிருப்புகள் உள்ளே வெள்ள நீர் சென்ற போதும் பாதிப்பு இல்லை.
கடந்த இரண்டு நாட்களாக மாலை வேளையில் இடி மின்னலுடன் கனத்த மழை பெய்து வருவதால் நீர் தேக்க பகுதிக்கு நீர் வரத்து சற்று அதிகமாக உள்ளது.

Leave a Reply