எக்கோ நிறுவனம் மற்றும் ஏலிபண்ட் ஹவுஸ் நிறுவனம் இனைந்து இன்று சிவனடி பாத மலையில் சிரமதானம்! SamugamMedia

நேற்று 16 ம் திகதி காலை முதல் சிவனடி பாத மலை உச்சியில் இருந்து அடிவாரம் வரை உள்ள வீதியில் இரு பகுதிகளும் சிவனடி பாத மலை வன பகுதியில் வீசி எறிந்து செல்ல பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன் உறை போன்ற உக்கா பொருட்கள் அனைத்தும் சேகரித்தனர்.

இவ்வாறு சேகரிக்க பட்ட பொருட்கள் அனைத்தும் நல்லதண்ணி நகரில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு நிலையத்தில் நேற்று மாலை ஒப்படைத்தனர்.
இந் நிகழ்வில் இரு வேறு நிறுவனங்களை சேர்ந்த 40 பேர் கலந்து கொண்டனர் எனவும் சேகரிக்க பட்ட பிளாஸ்ட்டிக் பொருட்கள் அனைத்தும் மஸ்கெலியா பிரதேச சபையின் அதிகாரி ஏ.டபிள்யூ ஹேமாந்த பொறுப்பு ஏற்றுக் கொண்டு அவற்றை ரக்காடு கிராமத்தில் இயங்கும் கழிவு பொருட்கள் தரம் பிரிக்கும் நிலையத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து அவற்றை அங்கு இருந்து அகற்றினார்.
தலைநகர் பகுதியில் இருந்து வந்த இறு வேறு கம்பனி உத்தியோகத்தர்கள் 40 பேர் நேற்று முன்தினம் 15 ம் திகதி நல்லதண்ணி நகருக்கு வந்து 16 ம் திகதி சிரமதான பணியில் ஈடுபட்டு இன்று 17 ம் திகதி மீண்டும் அவர்கள் தலைநகர் திரும்பினர்.

Leave a Reply