ஹிஸ்டீரியா எனப்படும் நோய் அறிகுறியுடைய 15 வயதுடைய சிறுவன் ஒருவர் மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலையில் இருந்து பதுளை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இணை செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த 15 வயதுடைய சிறுவனின் பாட்டி அண்மையில் ஸ்ரீபாத மலைக்கு சென்று மீண்டும் சிறுவனின் வீட்டுக்கு வருகை தந்ததாகவும் தெரியவந்துள்ளதாக வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனினும் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை எனவும் மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘ஹிஸ்டீரியா ‘ என்றால் என்ன?
ஆழ்மனதில் இருக்கும், ஆனால் வெளிமனதுக்கு ஒத்துவராத குழப்பங்கள் சில நேரங்களில் மனநலப் பிரச்சினையாக வெளிப்படுவதற்குப் பதிலாக உடல் நோய் தொந்தரவுகளாக, குறிப்பாக நரம்பு நோய்களாக வெளிப்படும்.
இதற்குத்தான் `ஹிஸ்டீரியா’ என்று பெயர். உடல் நோயாக வெளிப்பட்டாலும், மனநலச் சிகிச்சையால் மட்டுமே இதைக் குணப்படுத்த முடியும்.