உள்ளூராட்சி மன்றங்கள் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் அபாயம்! SamugamMedia

நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களும் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் வரும் அபாயம் இருப்பதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலை உடனடியாக நடத்தி அந்த சபைகளை மக்கள் பிரதிநிதித்துவ சபைகளாக மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஆகவே தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பதாக அதன் பிரதம செயற்பாட்டாளர் டி.எம். திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெறாமல் போகும் அபாயம் இருப்பதாக ஐரெஸ் நிறுவனத்தின் தலைவர் மஞ்சுள கஜநாயக்கவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply