நல்லூர் சங்கிலியன் அரங்கில் புதிதாக அமைக்கப்பட்ட சங்கிலிய மன்னனின் உருவச்சிலை திறப்பு! SamugamMedia

யாழ்ப்பாணம் சட்டநாதர் சிவன் கோவில் முன்பாகவுள்ள சங்கிலியன் மன்ற அரங்கில் சங்கிலிய மன்னனின் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டதோடு 78வது ஆண்டு நிறைவு நிகழ்வும் இன்று (19)  மாலை இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது முத்திரை சந்தியிலுள்ள சங்கிலியன் உருவச்சிலை முன்றலிருந்து சங்கிலிய மன்னனின் உருவப்படம் பருத்தித்துறை பிரதான வீதி வழியாக மங்கல வாத்திய கலாச்சார நிகழ்வுகளுடன் பவனியாக சங்கிலியன் மன்றத்தை சென்றடைந்து அங்கு வைக்கப்பட்டதோடு புதிதாக அமைக்கப்பட்ட சங்கிலிய மன்னனின் உருவச்சிலையும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply