ஊர்காவற்துறை பாலம் உடைந்த பின்னரும் பாதைச்சேவை தொடரும் அபாயம் – ஒருவர் காயம்.! அதிகாரிகள் எங்கே.!SamugamMedia

காரைநகர் – ஊர்காவற்துறை இடையிலான கடற்பாதை சேவை மிகுந்த அச்சநிலையில் காணப்படுவதாகவும் தற்போது ஊறுகாவற்துறையிலுள்ள பாலமே இவ்வாறு இடிந்து விழுந்துள்ள போதும் தொடர்ந்து இந்த பாதைச் சேவை தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக பயணிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்த உடைந்த பாலத்தினுடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் விழுந்து காயம் ஏற்பட்டிருந்தாகவும் ஆனாலும் தொடர்ந்தும் இந்த பாதைச்சேவை முன்னெடுக்கப்படுவதாக பயணிகள் கவலை வெளியிடுகின்றனர்.

காரைநகரில் இருந்து ஊர்காவற்துறைக்கு பயணிக்கும் உத்தியோகத்தர்களாக இருந்தாலும் சரி பொதுமக்களாக இருந்தாலும் சரி, தற்போது பாரிய நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை காரைநகர் – ஊர்காவற்துறைக்கு இடையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இலவசமாக பாதை சேவையினை நீண்ட காலமாக நடாத்தி வருகின்றனர்.

இரண்டு ஊர்களுக்கு இடையிலும் நிரந்தர பாலம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பதற்கு சுமார் 1700 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும் பாலம் அமைப்பதற்கான பணிகள் எவையும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply