அரசாங்கத்துக்கு முழு ஒத்துழைப்பு: குமார வெல்கம அறிவிப்பு ! SamugamMedia

பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன் என நாடாளுமன்ற  உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குமார வெல்கம, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதையிட்டு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கடின முயற்சிக்கு அமைய சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதையிட்டு எதிர்க்கட்சி என்ற ரீதியில் மகிழ்ச்சியடைய வேண்டும்.

தற்போதைய நிலையில் முழுமையான ஒத்துழைப்பை நான் வழங்குவேன்,ஏனெனில்  நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. 

எந்நாளும் திருடன், திருடன் என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது, ஆனால் எந்த திருடனும் பிடிபடவில்லை. பிடிக்கப்பட்ட திருடனும் இல்லை நாடாளுமன்றத்தில் இரு புறமும் திருடர்கள் இருக்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் 30 வருடகாலம் உள்ளவர் என்ற அடிப்படையில் குறிப்பிடுகிறேன், ஆளும் மற்றும் எதிர்தரப்பில் திருடர்கள் உள்ளார்கள். பிடிப்பட்டால் அனைவரும் நெருக்கடிக்குள்ளாகுவார்கள் என்பதால் திருடர்கள் ஒருபோதும் அகப்படமாட்டர்கள். மோசடி செய்யப்பட்ட நிதி நாட்டில் இல்லை என்று தெரிவித்தார்.

Leave a Reply