டிக்கோ கார்சியாவில் சிக்கியுள்ள ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டம்! SamugamMedia

டிக்கோ கார்சியாவில் உள்ள ஈழத்தமிழர்கள் ஐவர்  தம்மை பிரித்தானியா பொறுப்பேற்க வேண்டும் எனக் கோரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதனால் சிகிச்சைக்காக  ரூவாண்டா நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இலங்கையில் இருந்து கனடா செல்லும் நோக்கில் 2021.03.21 இல் இலங்கையில் இருந்து 63 பேர் இந்தியா பயணித்து இந்தியாவில் தங்கியிருந்த 20 இலங்கையர் அடங்களாக மொத்தம் 89 பேர் 2021-09-23  இந்தியாவின்  கொல்லத்தில் இருந்து  புறப்பட்டு 12 நாள் பயணித்தபோது  படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக  2021-10-04 இல் டிக்கோகார்சியா தீவில்  தஞ்சமடைந்தனர். 

இவ்வாறு தஞ்சமடைந்தவர்களை டிக்கோகார்சியாத்தீவில் உள்ள பிரித்தானியப்படைகள் அடைக்கலம் வழங்கி பராமரித்து வருகின்றபோதும் அவர்கள் விரும்பும் நாட்டில் வாழ அனுமதிக்கவில்லை. 

இந்த நிலையில் டிக்கோகார்சியா தீவில் அமைக்கப்பட்ட இடைத்தங்கல் முகாமில்  ரெண்ட்கொட்டகை  முகாமிலேயே பராமரிக்கப்பட்டனர். 

இவ்வாறு வாழ்ந்த மக்கள் 17 மாதங்களாக தொடர்ந்தும் தடுத்து வைத்திருக்கும் மன அழுத்தம் காரணமாக தமக்கு பிரித்தானியா பொறுப்பேற்க வேண்டும் என விடுத்த தொடர் கோரிக்கை ஏற்கப்படாதமையினால் ஐவர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். 

இவ்வாறு தற்கொலைக்கு முயன்ற ஐவரும் சிகிச்சைக்காக ருவாண்டா நாட்டிற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

மற்றையவர்கள் அங்கு உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

தற்கொலைக்கு முயன்ற ஐவரில் இருவர் கடந்த 12 திகதியும் மேலும் மூவர் 16 திகதியும் தற்கொலைக்கு முயன்றபோதே விமானங்களில் ருவாண்டா கொண்டு செல்லப்பட்டுள்ளதாக டிக்கோகார்சியாவில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள உறவுகளிற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *