அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இணைத்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை மறு அறிவித்தல் வரை பிற்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைமறுதினம் (மார்ச் 25) நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலமான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்காக இந்தப் பரீட்சை நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.