கல்வியியல் கல்லூரிகளில் கல்வி கற்ற 7800 டிப்ளோமாதாரிகளை அடுத்த மாதம் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களின் பெறுபேறுகள் அடங்கிய ஆவணங்கள் தேசிய கல்வி நிறுவகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு கூறியுள்ளது.
முதலாம் தரம் முதல் 11 ஆம் தரம் வரை, கணிதம், விஞ்ஞானம், ஆங்கில பாடங்களைக் கற்பிப்பதற்கான ஆசிரியர்களே புதிதாக நியமிக்கப்படவுள்ளனர்.