ஹீரோயின்களுக்கு டப் கொடுப்பாங்க போலயே…! பிக்பாஸ் ஜனனியின் லேட்டஸ் க்ளிக்ஸ்…!samugammedia

தென்னிந்திய பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்6இல் இலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜனனி கலந்துகொண்டார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் மிகவும் சின்ன பெண்ணாக கலந்துகொண்டு வெற்றிகரமாக விளையாடிய ஜனனியை அடுத்த த்ரிஷா இவர், லாஸ்லியா இவர் என்று கூறி ஆரம்பத்திலேயே ஏராளமான ஆர்மிகள் உருவாக்கப்பட்டதுடன் இலங்கையை தாண்டி உலக நாடுகள் எங்கும் ஜனனிக்கான ஆதரவு அலைகள் பெருகியது.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஜனனி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்வானது ஜனனியின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை என்றுதான் கூறவேண்டும்.

ஏனெனில் பிக்பாஸ் ஹவுஸில் இருந்து வெளியேறிய ஜனனிக்கு திரையுலக வாய்ப்புக்கள் மற்றும் விளம்பர பட வாய்ப்புக்கள் என அடுத்தடுத்து பல்வேறு வாய்ப்புக்கள் வரத்தொடங்கியது.

இவ்வாறானதொரு நிலையில் தற்போது இளையதளபதி விஜயின் நடிப்பில் உருவாகும் லியோ திரைப்படத்தில் ஜனனி நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இடையிடையே சமூகவலைத்தளங்களை எட்டிப்பார்க்கும் ஜனனி தனது போட்டோசூட் படங்கள் மற்றும் வீதியோக்களை பதிவிட்டு ஏராளமான லைக்ஸ்களை குவித்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது ‘ சும்மா ஒரு டான்ஸ் அமேசிங் சொப்பிங்’ என்றவாறு வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த வீடியோ தற்போது  சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply