திருகோணமலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான விசேட வாழ்வாதார திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்! samugammedia

திருகோணமலை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கும் விசேட திட்டத்தை அமுல்படுத்துவதற்கான கலந்துரையாடொன்று மாவட்ட செயலகத்தில் இன்று (15) இடம் பெற்றது. திருகோணமலை மாவட்ட செயலாளர் பி.எச்.என்.ஜயவிக்ரம தலைமையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலத்திலும் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நடை முறைப்படுத்தப்படவுள்ளது.

சமூக சேவைகள் திணைக்களம் ஊடாக நடை முறைப்படுத்தப்படவுள்ள குறித்த கலந்துரையாடலில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் த.பிரணவன், பிரதேச செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply