முஜிபுர் ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி..!samugammedia

கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு விகாரமகாதேவி பூங்கா அருகில் “மாற்றத்தை ஏற்படுத்தும் வருடம் – 2024” எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியினால் இடம்பெற்றுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிசார்  மேற்கொண்ட கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை  பிரயோகத்தினால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பாதிக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதன் பின்னர்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நலம் விசாரிக்க சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply