வட மாகாண விளையாட்டுத்துறையைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நீரில் உயிர் பாதுகாப்பு தொடர்பான அறிவையும் நடைமுறைத் திறன்களையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சித் திட்டம் வவுனியா ஓமந்தை விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றது.
சில நாட்கள் தங்கியிருந்து பயிற்சி பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சித் திட்டத்தில், நீரில் ஏற்படக்கூடிய ஆபத்துகளை எதிர்கொள்ளுதல், உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான கோட்பாட்டு அறிவு மற்றும் நடைமுறைச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இப்பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பங்கேற்பாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, வவுனியா மாவட்டச் செயலாளர் பி.ஏ. சரத்சந்திர அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மேலதிக மாவட்டச் செயலாளர் என். கமலதாசன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
விளையாட்டுத்துறையினரின் திறன்களை மேம்படுத்துவதுடன், நீரில் ஏற்படக்கூடிய அவசர நிலைகளின்போது உயிர்களைக் காப்பாற்றுவதற்கான அறிவையும் செயன்முறைத் திறன்களையும் வளர்ப்பதில் இப்பயிற்சித் திட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது.




