திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பிரதேச செயலகப் பிரிவில் குறைந்த வருமானம் கொண்ட வீடற்ற குடும்பங்களுக்கு நிர்மாணிக்கப்பட்ட 4 வீடுகள் இன்று (09) கையளிக்கப்பட்டன.
அரசாங்கத்தின் ‘இருப்பதற்கு ஒரு வீடு – அழகான வாழ்க்கை’ என்ற தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடுகளை, பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயனாளிகளிடம் கையளித்தார்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஒவ்வொரு வீடும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியானதாகும்.
இந்நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் திருகோணமலை மாவட்ட முகாமையாளர் நிமால் ராஜசிங்க, சேருவில பிரதேச சபையின் தவிசாளர் துசார சம்பத், சேருவில பிரதேச செயலாளர் பி.ஆர். ஜெயரட்ன, பிரதேச சபை உறுப்பினர்கள் ,பிரஜா சக்தி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.




