பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் நிதியிலிருந்து 2.64மில்லியன் ரூபா செலவில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு, பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கல், பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு பொதி வழங்கல் ,முதியோர்களுக்கான உதவி வழங்கல், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் முகமாலை உப அலுவலகத்தில் நடைபெற்றது.
தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டு குறித்த உதவிகளை வழங்கி வைத்தார்.
நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்




