ரூபாவின் பெறுமதி சற்று உயர்வு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (29) சற்று உயர்ந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 295.30 ரூபாவாகவும், 303.79 ரூபாவாகவும் உள்ளது.

நேற்றைய தினம் (28) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுதியானது 295.55 ரூபாவாகவும், 304.01 ரூபாவாகவும் உள்ளது.

வளைகுடா நாணயங்கள் உட்பட ஏனைய பிரதான வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராவும் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *