வடக்கில் கொரோனாவால் மேலும் 10 பேர் பலி

வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று 10 பேர் உயிரிழந்தனர்.

மேலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏழு பேரும், வவுனியா மாவட்டத்தில் 2 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர்.

அத்தோடு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொடிகாமத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஞா. பிரகாஷ் (வயது – 26) உயிரிழந்தார்.

மேலும் போதனா மருத்துவமனையில் 10ஆம் விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த 23 வயது இளைஞர், நெடுந்தீவைச் சேர்ந்த 70 வயது நபர், பருத்தித்துறையைச் சேர்ந்த 72 வயது ஆண், கந்தர்மடத்தைச் சேர்ந்த 79 வயது ஆண் ஆகியோர் உயிரிழந்தனர்.

வடமராட்சி – அல்வாயைச் சேர்ந்த 75 வயது ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

எனினும் தெல்லிப்பழையைச் சேர்ந்த 76 வயது பெண்ணும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார்.

இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் 47 வயது ஆணும், 86 வயது பெண்ணும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 59 வயது ஆண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார் என்றும் தெரிய வருகின்றது.

Leave a Reply