பெரியநீலாவணையில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில் ‘அத்தம’ தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம்; பிரதி அமைச்சர் வசந்த பீரிஸ் பங்கேற்பு

 (அலானி எம் நியாஸ், ஷனா) 

அதிமேதகு ஜனாதிபதியின் எண்ணக்கருவில், ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் கீழ் “தூய்மையான தேசத்திற்கான தேசிய மக்கள் பணி” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘அத்தம’ தேசிய வேலைத் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று (19) பெரியநீலாவணையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ,  தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து  பெரியநீலாவணை மயானத்தை அண்டிய பகுதிகளில் சிரமதான பணிகளில்ல் ஈடுபட்டு, குறித்த பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டதுடன்    .நீண்டகாலமாக வடிகான்களில் தேங்கிக் கிடந்த குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்களும் கனரக இயந்திரங்களின் உதவியுடன் அகற்றப்பட்டு, வடிகான்கள் சீரமைக்கப்பட்டன.

கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும்  பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான வசந்த பீரிஸ், பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ. கஜேந்திரன், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச அமைப்பாளர்முகம்மட் றினாஸ்,  தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். அரவிந்த், வேள்வி பெண்கள் அமைப்பு மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் (ONUR) ஆகியவற்றின் பிரதிநிதிகள், சுகாதார அதிகாரிகள், கல்முனை மாநகர சபை ஊழியர்கள்,  பிரஜா சக்தி தவிசாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், முப்படையினர், பொலிஸார், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் ஒன்றிணைந்து சிரமதானப் பணிகளில் ஈடுபட்டனர்.

எதிர்காலத்தில் பெரியநீலாவணை பகுதியில் சுத்தமானதும், ஆரோக்கியமானதுமான சுற்றுச்சூழலை உருவாக்குவதுடன், இன, மத பேதமின்றி மக்கள் ஒன்றிணைந்து சமூகப் பொறுப்புடன் செயற்படுவதன் முக்கியத்துவம் அதிதிகளினாலும் சிவில் சமூக பிரதிநிதிகளாலும் இங்கு வலியுறுத்தப்பட்டன.

Leave a Reply