செல்லையா பேரின்பராசா
பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள துறைநீலாவணை சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் நேற்று (18.09.2026) காலை சாதணையாளர் பாராட்டு விழாஇ இவ் வித்தியாலய அதிபர் ஆர். கருணா தலமையில் வெகுசிறப்பாக இடம்பெற்றது .
இந் நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் பிரதம அதிதியாகவும், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான பு.திவிதரன், கே.ரகுகரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் எஸ்.மனோகரன், ஆகியோர்ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், ஆசிரிய ஆலோசகர்களான ஆ.மதியழகன், ஆ. ரவிச்சந்திரன், து.அச்சுதன், த.தர்மசீலன், எஸ்.பத்மநாதன் ஓய்வு நிலை அதிபர் செல்லையா பேரின்பராசா, அபிவிருத்தி உத்தியோகத்தர் த.சசிகரன் ஆகியோர் அழைப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இவ் விழாவில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
























