யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக நான்கு மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில், கௌரவ ஜனாதிபதியின் அவசரத் தலையீட்டைக் கோரி ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
இவ்வாறு ரஜீவன் எம்.பி தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
குறித்த அனுமதிகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டிருந்தால் அவை விசாரிக்கப்பட்டு பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
மேலும், சட்டத்திற்கு உட்பட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, யாழ்ப்பாண மக்களின் நலன்களையும் சமூகப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு கேட்டுள்ளேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.





