மாற்றுத்திறனாளி மாணவனுக்கு யாழில் நேர்ந்த அவலம்! பாடசாலையில் நடந்தது என்ன?

யாழ்ப்பாணம், கைதடியில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பாடசாலையில் கல்வி பயிலும்மாணவன் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பாடசாலையின் மாணவர் விடுதியில் தங்கியிருந்து கல்வி பயிலும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த  15 வயதுடைய மாணவன் மீதே நேற்று (13) இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த மாணவன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட கிராம சேவகருக்கும் பொலிஸார் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாணவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான காரணம் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Leave a Reply