நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி! நள்ளிரவு முதல் அதிகரிக்கும் விலைகள்!

நாட்டில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை இன்று (30) நள்ளிரவு முதல் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளும் 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பு இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply