விபத்துகளைக் குறைக்க வவுனியாவில் புதிய நடவடிக்கை!

இரவு நேரங்களில் வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்கும் வகையில், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை விசேட நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளது.

இதற்கமைய, வவுனியா – மன்னார் வீதிக்கரையில் அமைந்துள்ள மின்சாரத் தூண்கள் மற்றும் மரங்களில் ஒளியைப் பிரதிபலிக்கும் ரிப்ளக்டிவ் டேப்கள் ஒட்டப்பட்டுள்ளன.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் பா. பாலேந்திரன் தலைமையில் நடைபெற்ற இச்செயற்பாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம், சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இரவு நேரங்களில் வாகனங்களின் ஒளி இந்த டேப்கள் மீது படும்போது, தூண்கள் மற்றும் மரங்கள் சாரதிகளுக்குத் தெளிவாகத் தெரியவரும்.

இதன் மூலம் வீதி விபத்துகளைக் குறைத்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply