மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? தம்பலகாமத்தில் அதிகாரிகள் கள விஜயம்

திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் மேய்ச்சல் நிலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் அதிகாரிகள் கள விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே. சதிசேகரன் தலைமையிலான குழுவினர், நேற்று (05) கடவானை மற்றும் அட்டவானை ஆகிய பகுதிகளுக்குச் சென்று மேய்ச்சல் நிலங்களைப் பார்வையிட்டனர்.

இந்தக் கள விஜயத்தில் உதவிப் பிரதேச செயலாளர் இரா. பிரசாந்தன், காணி உத்தியோகத்தர், கால்நடை வைத்திய அதிகாரிகள், கிழக்கு மாகாண கால்நடைத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கால்நடைப் பண்ணை உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அண்மைக்காலமாக கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகளைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த பிரச்சினைகளைக் கள ஆய்வின் மூலம் ஆராய்ந்து, கால்நடை வளர்ப்பாளர்களுக்கு சுமூகமான தீர்வொன்றை முன்வைக்கும் நோக்கிலேயே இந்த விஜயம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply