திருகோணமலை மாவட்ட, தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று புதிய வீடுகள் இன்று (05.11.2026) உரிய பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, புதிய வீடுகளை திறந்து உத்தியோகபூர்வமாக பயனாளிகளிடத்தில் கையளித்தார்.ஒவ்வொரு வீடும் தலா 10இலட்சம் ரூபா செலவில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டது.தம்பலகாமம்,கல்மெடியாவ வடக்கு மற்றும் கல்மெடியாவ தெற்கு ஆகிய மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் குறித்த புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கையளிக்கப்பட்டது.
தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்காக 13வீடுகள் நிர்மாணிப்பதற்கான நிதிகள் தேசிய வீடமைப்பு அதிகார சபை மூலமாக வழங்கப்பட்டுள்ளன.
இந் நிகழ்வில் தம்பலாகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் நிமல்ராஜசிங்க,பிரஜாசக்தி உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
வீடமைப்பு வசதியற்ற குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களுக்குப் பாதுகாப்பானதும் வசதியானதுமான வாழ்விடச் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் இவ்வீடுகள் அரசாங்கம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன எதிர்கட்சிக்கு இனி எதிர்காலம் இல்லை எதுவும் செய்ய முடியாத நிலையில் தடுமாறுகின்றனர். இதனால் தான் பாராளுமன்றத்திலும் வருகை தந்து ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து வேறு விதமாக செயற்படுகின்றனர்
சபாநாயகரை பதவி விலகுமாறு எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர் இது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை தேடி தீர்ப்பதற்காக பாராளுமன்றம் செல்கின்றோம் எனவும் தெரிவித்தார்.





