சட்டவிரோதமான பிரமிட் முறையிலான நிதி நிறுவனமொன்றை நடத்தி வந்ததுடன், பணச்சலவை நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் நபரொருவர் கைது கைது செய்யப்பட்டுள்ளார்.
48 வயதுடைய இவர் பாணந்துறைப் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பணச்சலவை தடுப்புச் சட்டம் மற்றும் வங்கிச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை நடத்துதல், அதற்குப் பணம் திரட்டுதல், விளம்பரப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், குறித்த திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தவர்களின் குற்றவியல் நம்பிக்கையை மீறியமை தொடர்பிலும் அவர் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.





