உயர்கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு மாதாந்த நிதியுதவி வழங்குவதற்கான நேர்முகப்பரீட்சை!

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கத்தின் ( YMMA )ஏற்பாட்டில், உயர்கல்வியைத் தொடர்ந்து கற்பதற்கான மாதாந்த நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கான நேர்முகப்பரீட்சை வெள்ளிக்கிழமை (06) கிண்ணியா அப்துல் மஜீத் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

சங்கத்தின் தேசிய தலைவர் எம்.ஏ.எம். ஷியாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொதுப் பொருளாளர் றிஸ்வி பாரூக், முன்னாள் தேசியத் தலைவர்களான சுபைர் ஹஸன், ஹலீம் ஏ. அஸீஸ், திருகோணமலை மாவட்டத் தலைவர் ஏ.எல்.எம். சித்திக், கிண்ணியா கிளைத் தலைவர் ஏ.எச்.எம். இன்ஷாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

திருகோணமலை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 58 மாணவர்கள் நேர்முகப்பரீட்சையில் பங்கேற்றனர்.

விண்ணப்பித்த அனைத்து மாணவர்களையும் தெரிவு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply