மலையக வர்த்தக சிப்பந்திகள் நலன்புரி சங்கம் உருவாக்குவதற்கான ஆரம்பகட்ட முன்னெடுப்பு

வர்த்தக நிறுவனங்கள், கடைகள், வணிக நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏனைய தொழில் நிறுவனங்களில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் மற்றும் சிப்பந்திகளின் தொழில்சார் உரிமைகள், நலன்கள், பாதுகாப்பு மற்றும் எதிர்கால முன்னேற்றம் ஆகியவற்றைத் தனித்துவமாகப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஒரு முறையான அமைப்பின் தேவை நீண்டகாலமாக உணரப்பட்டு வருகின்றது

 வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மற்றும் வணிக நிலையங்களின் அன்றாடச் செயற்பாடுகளுக்கு முக்கியப் பங்களிப்புச் செய்கின்ற ஊழியர்கள், சிப்பந்திகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள், நலன்கள், தொழில்சார் பிரச்சினைகள் மற்றும் எதிர்காலப் பாதுகாப்பு தொடர்பிலும் தனித்துவமான கவனம் அவசியமாகத் தேவைப்படுகின்றது.

 வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுகின்ற சிப்பந்திகள் மற்றும் ஊழியர்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் மற்றும் தொழில்சார் உரிமைகளுக்காகப் போதியளவிலான குரல் எழுப்பப்படுவதில்லை என்ற கவலையும் தொழிலாளர்கள் மத்தியில் காணப்படுகின்றது.

இந்தப் பின்னணியில், வர்த்தக சங்க நிர்வாகத்திடம் வர்த்தக சிப்பந்திகள் விடுத்த வேண்டுகோலை எற்றுமற்றும் சிப்பந்திகள் மற்றும் ஊழியர்கள் சார்பாக முன்வைக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில், அவர்களுக்கெனத் தனித்துவமான ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து, அவர்களின் பிரச்சினைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான உரிய ஒத்துழைப்பையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, வர்த்தகர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் உரிமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் அமைப்புகள் செயற்படுவது போலவே, அந்த வர்த்தக நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் அன்றாடச் செயற்பாடுகளுக்கும் தமது உழைப்பையும் அர்ப்பணிப்பையும் வழங்குகின்ற சிப்பந்திகள் மற்றும் ஊழியர்களின் உரிமைகள், கௌரவம், நலன்கள் மற்றும் எதிர்காலத்தையும் பாதுகாக்கக்கூடிய தனித்துவமான அமைப்பு ஒன்றின் தேவை வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, இவ்வாறான நியாயமான கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், சிப்பந்திகள் மற்றும் ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த குரலையும் வலுவான பிரதிநிதித்துவத்தையும் உருவாக்கும் நோக்கிலும் “மலையக வர்த்தக சிப்பந்திகள் நலன்புரி சங்கம்” என்ற அமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, இம்முன்னெடுப்பானது மலையகப் பிரதேசங்களில் மாத்திரம் தொழில்புரியும் சிப்பந்திகளை இலக்காகக் கொண்டதல்ல.

மலையகத்தைப் பூர்வீகமாகக் கொண்டு, கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், நகரங்கள் மற்றும் பிரதேசங்களில் வர்த்தக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக நிலையங்கள், தொழிற்சாலைகள், சேவைத் துறைகள் மற்றும் ஏனைய தொழில்துறைகளில் பணியாற்றி வருகின்ற அனைத்து மலையக மக்களையும் ஒன்றிணைப்பதே இம்முன்னெடுப்பின் விரிவான நோக்கமாகும்.

தொழில் வாய்ப்புகளைத் தேடி மலையகத்திலிருந்து வெளியேறி, கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்து தொழில்புரியும் ஆயிரக்கணக்கான மலையக இளைஞர்கள், யுவதிகள் மற்றும் தொழிலாளர்களும் இவ்வமைப்பின் செயற்பாட்டு எல்லைக்குள் உள்வாங்கப்பட வேண்டியவர்களாவர்.

அவர்கள் எந்த மாவட்டத்தில் பணியாற்றுகின்றார்கள், எந்த வகையான தொழிலில் ஈடுபடுகின்றார்கள், எந்த நிறுவனத்தில் சேவையாற்றுகின்றார்கள் அல்லது எந்தப் பிரதேசத்தில் வசிக்கின்றார்கள் என்பதற்கு அப்பால், அவர்களின் தொழில்சார் உரிமைகள், நலன்கள், பாதுகாப்பு மற்றும் பொதுவான எதிர்கால முன்னேற்றம் ஆகியவற்றைப் பாதுகாக்கக்கூடிய ஒரு ஒருங்கிணைந்த பிரதிநிதித்துவ அமைப்பை உருவாக்க வேண்டியது காலத்தின் அவசியமாகும்.

இவ்வமைப்பின் ஊடாக சிப்பந்திகள் மற்றும் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உரிய தரப்பினரிடம் முன்வைத்தல், தொழில்சார் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள ஒத்துழைத்தல், அவர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அவசர மற்றும் அத்தியாவசிய நலன்புரிச் செயற்பாடுகளை முன்னெடுத்தல், கல்வி, தொழில் வழிகாட்டல் மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நோக்கங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.

எனவே, மலையகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அனைத்துச் சிப்பந்திகள், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களும் இம்முயற்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, கட்சி, மதம், பிரதேசம் மற்றும் தொழில் வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்து, இவ்வமைப்பை வலுவானதும் பயனுள்ளதுமான மக்கள் அமைப்பாகக் கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் அழைப்பு விடுக்கின்றோம்.

மலையக சிப்பந்திகளின் உரிமைகள், நலன்கள், கௌரவம் மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் என்றார் 

Leave a Reply