நாடு முழுவதும் பல பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையின்படி, இன்று (24) 24 மாவட்டங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழையும், அதனுடன் கடுமையான மின்னல் தாக்கமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில், இடியுடன் கூடிய மழையின் போது மின்னல் தாக்கம் தீவிரமடைய அதிக வாய்ப்புள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தைத் தவிர்ந்த ஏனைய 24 மாவட்டங்களிலும் முழுமையாகவோ அல்லது சில பகுதிகளிலோ இந்த எச்சரிக்கை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மின்னலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




