வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப்ரக வாகனம் கனகராயன்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் கப்ரக வாகனத்தில் பயணித்த 50 வயதான நபர் உயிரிழந்ததுடன், அதன் சாரதி கவலைக்கிடமான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு சென்ற கனகராயன்குளம் பொலிசார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply