வாழ முடியாத நாடாக மாறுகிறது இலங்கை மைத்­திரி அணி சீற்­றம்!

வாழ முடியாத நாடாக மாறுகிறது இலங்கை
மைத்­திரி அணி கடும் சீற்­றம்!

‘இலங்கை இன்று மக்கள் வாழ­மு­டி­யாத நாடாக மாற்­றம் பெற்று வரு­கின்­றது – இவ்­வாறு சிறீ­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் முக்­கி­யஸ்­த­ரான பேரா­சி­ரி­யர் ரோஹண லக்ஸ்­மன் பிய­தாஸ தெரி­வித்­தார். கண்­டி­யில் ஊட­கங்­க­ளுக்கு நேற்று கருத்­துத் தெரி­விக்­கும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­விக்­கை­யில்,

‘கடந்த பொதுத் தேர்­த­லில், கொள்கை ரீதி­யாக எமது கட்சி தேசிய சொத்­துக்­க­ளைப் பாது­காப்­ப­தற்­கா­கவே முன்­நின்று செயற்­பட்­டது. வெளி­நா­டு­க­ளுக்கு விற்­பனை செய்­யப்­பட்­டுள்ள பொதுச் சொத்­துக்­களை மீளக் கைப்­பற்­று­வ­தா­க­வும் அறி­வித்­தி­ருந்­தது.
துர­திஷ்­ட­வ­ச­மாக இன்று எதனை விற்­பனை செய்­ய­லாம் என அரசு வகை தேடு­கின்­றது. வயல் நிலங்­கள், பெறு­ம­தி­யான காணி­கள், தொழிற்­சா­லை­கள் என அனைத்­தை­யும் அரசு விற்­பனை செய்து வரு­வதை நாம் கடு­மை­யாக எதிர்க்­கின்­றோம்.

சொத்­துக்­களை பாது­காப்­ப­தா­கக் கூறி ஆட்­சிக்கு வந்த அரசு சொத்­துக்­களை விற்­பனை செய்­கின்­றது. கொழும்பு துறை­மு­கத்­தைச் சேர்ந்த பகு­தி­க­ளும் இன்று விற்­பனை செய்­யப்­ப­ட­வுள்­ளன. இது மிக­வும் கவ­லைக்­கு­ரிய விட­ய­மா­கும். அதே­போல் இன்று தொழிற்­து­றை­யில் நிபு­ணர்­கள் பல­ரும் அர­சின் குழுக்­க­ளி­லி­ருந்து விலகி வரு­கின்­ற­னர்.
மேலும், பலர் இலங்­கையை விட்டு வெளி­யே­றத் தொடங்­கி­யுள்­ள­னர். வாழ­மு­டி­யாத நாடாக இலங்கை மாறி வரு­கின்­றது. இந்த நிலை­மையை மாற்­றி­ய­மைப்­ப­தற்­காக கொள்கை ரீதி­யி­லான மாற்­றம் தேவைப்­ப­டு­கின்­றது’ – –என்­றார்.

Leave a Reply