ராஜஸ்தான் அணியை வீழ்த்தி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 24வது போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி  37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 24ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி பந்து களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து, 193 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

இதனால், குஜராத் அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Reply