அதி நவீன அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கிகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 118 அதி நவீன அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கிகளை 7 ஆயிரத்து 523 கோடி ரூபாய் செலவில்  கொள்வனவு செய்ய இராணுவ அமைச்சகம் தீர்மானித்துள்ளது.

இந்த பீரங்கி 58.5 டன் எடை உடையது. 10.638 மீற்றர் நீளமும் 9.456 மீற்றர் உயரமும் உடையது. 1400 குதிரை சக்தி திறனுடன் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நவீன 120 மி.மீ துப்பாக்கியுடன் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், எந்த நேரத்திலும், எந்த தட்ப வெப்பத்திலும் தாக்குதல் நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் சமதளப் பரப்பில் மணிக்கு 70 கி.மீ வேகத்திலும், மேடு பள்ளங்கள் நிறைந்த மலைப்பகுதிகளிலும் மற்றும் கடுமையான நிலப்பகுதியிலும் மணிக்கு 40 கி.மீ வேகத்திலும் இயங்கும் திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply