நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸின் டெல்டா திரிபின் உப மாறுபாட்டுக்கு வைத்திய வல்லுநர்கள் வேறு பெயரைக் கொடுத்துள்ளதாக, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் பிரிவின் தலைவர் டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
அதன்படி, உப மாறுபாட்டுக்கு AY28 என்று அதிகாரப்பூர்வ பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், டெல்டா திரிபின் இந்த மாறுபாடு முதலில் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் பிரிவால் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த உப வகையின் 382 மாதிரிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 228 இலங்கையில் காணப்படுகின்றன என்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் அறிவித்துள்ளது.






