360 மெற்றிக் தொன் பால்மா துறைமுகத்தில் தேக்கம்!
இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 360 மெற்றிக் தொன் பால்மா அடங்கிய 16 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேக்கமடைந்துள்ளன என்று பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஸ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
சுமார் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான பால்மாவின் கையிருப்பு காலாவதியாக வாய்ப்புள்ளது. வர்த்தக வங்கிகளின் டொலர் பற்றாக்குறை காரணமாக இவ்வாறு பால்மா தேக்கமடைந்துள்ளது. எனினும் பால்மா கையிருப்பை வெளியிடுவதற்கு தலையிட வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.