தொற்று நீக்கியை பருகிய இரு சிறைக்கைதிகள் உயிரிழப்பு!

கொழும்பு, புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானிய சிறைக்கைதிகள் தொற்று நீக்கித் திரவத்தைப் பருகி இருவர் உயிரிழந்தமையுடன், மேலும் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த கைதிகள் இருவரும் ஈரானிய பிரஜைகள் எனச் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

மேற்படி தொற்று நீக்கித் திரவத்தைப் பருகிய ஈரானிய சிறைக்கைதிகளான மேலும் 10 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 12 பேரும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply