இன்று இதுவரையில் 673 பேருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 146 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று 527 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அதன்படி இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 673 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 529,754 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 24ஆயிரத்து 721 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை,கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 366 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 491,604 ஆக அதிகரித்துள்ளது.

தைவான் கட்டிட தீ விபத்து; 46 பேர் பலி..!

ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! என்ன நடந்துச்சு தெரியுமா?

Leave a Reply