கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 442 பேர் இன்று புதன்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 533,208 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 25ஆயிரத்து 991 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை,கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 360 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 493,674 ஆக அதிகரித்துள்ளது.






