அரசாங்கத்துடன் இருக்கும் பிரச்சினைகளை நாங்கள் அரச தரப்பினருடன் கலந்துரையாடுகின்றோம். அதேபோன்று நாட்டில் இருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடுவோம்.
மேலும் அதனை யாரும் தடுக்க முடியாது. அதேபோன்று நாங்கள் அமைத்த அரசாங்கத்தை சரியான வழிக்கு கொண்டுசெல்வதற்காக நியாயமான விமர்சனங்களையே குறிப்பிடுகின்றோம்.
அதற்கான உரிமை எங்களுக்கு இருக்கின்றது என சிறிலங்கா சுதந்திர கட்சியின் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அத்தோடு அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளை விமர்சித்து வருவது தொடர்பாக பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் குற்றச்சாட்டு தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.






