-மருதமுனை…

-மருதமுனை நிருபர்-

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் சௌபாக்கியா நெசவு உற்பத்தி கிராமம் 4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மருதமுனையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தை சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் வணிக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஷேஹான் சேமசிங்க கடந்த 18 ஆம் திகதி மாலை நேரடியாக சென்று பார்வையிட்டார்.

பிரதேச செயலாளர் ஜெ.லியாகத் அலி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டப்ளியு.டி.வீரசிங்க, மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டு நெசவு உற்பத்தி கிராமத்தின் வேலைத்திட்டங்களை பார்வையிட்டனர்.

வருமானம் குறைந்த நெசவு உற்பத்தியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுடைய உற்பத்தியை அதிகரித்து தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்வதே இந்த இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எச்.பி.அனீஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜௌபர், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம் சாலீஹ், மருதமுனை-நற்பிட்டிமுனை சமூர்த்தி வங்கி முகாமையாளர் சட்டத்தரணி எம்.எம்.முபீன், பாராளுமன்ற உறுப்பினர் வீரசிங்கவின் இணைப்பாளர் ஜௌபர், பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தர் இசட்.எம்.நௌசாத் உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply