புத்தளத்தில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்..!

புத்தளம் ஆனமடுவ பிரதேசத்தில் இன்று புதன்கிழமை (20) இடம்பெற்ற வீதிவிபத்துச் சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் புத்தளம் கல்லடி பிரதேசத்தில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக பொலநறுவ பகமூன பகுதியிலிருந்து வருகை தந்த சிலர் பயணித்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் கல்லடி பிரதேசத்திலிருந்து பொலநறுவ பகமூன பகுதியை நோக்கிச் சென்ற வேன் ஒன்று, ஆனமடுவ நகரை அண்மித்த பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, எதிர்த்திசையில் வந்த டிமோ பட்டா லொறியொன்று மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டதையடுத்து இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த வேன் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள சிறிய பாலத்திற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

எனினும் விபத்து இடம்பெற்ற போது குறித்த வேனில் 8 பேர் பயணித்துள்ள போதிலும் 4 பேர் மட்டுமே காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

Leave a Reply