சமூக வலைத்தள பாவனையிலிருந்து தற்காலிகமாக விடைபெற்றார் மஹிந்த

சமூக ஊடக பாவனையில் இருந்து சிறிது காலத்திற்கு தாம் விலகியிருக்கத் தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து தன் முகப்புத்தக பக்கத்தில் இன்று புதன்கிழமை பதிவொன்றின் மூலம் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று (16) தன் இடது கண்ணில் செய்துகொண்ட சத்திரசிகிச்சை காரணமாக மருத்துவர்களின் ஆலோசனையின் பிரகாரம் டிஜிட்டல் திரையைப் பார்வையிடுவதில் இருந்து தவிர்ந்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இதன் காரணமாக பதிவுகளுக்கு பதிலளிக்க முடியாதுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தன் கண்ணில் மேற்கொண்டுள்ள சத்திரசிகிச்சையின் பின்னர் மீண்டும் ஒக்டோபர் 31 ஆம் திகதியே மருத்துவர் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவிருப்பதாக அவர் மேலும் தன் முகப்புத்தக பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்

Leave a Reply